திரு.நிஷாந்த பொன்சேகா

மீட்புத் தலைவர் – மைக்ரோ லீசிங்

திரு. பொன்சேகா அவர்கள் கடன் மீட்பு துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். Bartleet Finance PLC இல் கடன் மீட்பு நிர்வாகியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் , Orient Finance PLC இல் தனது பணிக்காலத்தில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் LOLC இல் கடன் மீட்பு முகாமையாளராக இணைந்த திரு. திரு. பொன்சேகா அவர்கள், அதனை தொடர்ந்து மூத்த கடன் மீட்பு முகாமையாளராக பதவி உயர்வு பெற்றார். LOLC மைக்ரோ குத்தகையின் முழு கடன் மீட்பு மற்றும் முன்கூட்டல் கடன் மீட்பு நடவடிக்கைகளையும் இவர் மேற்பார்வை செய்து வருகிறார்.

திருமதி ஷியாமலி பெமரத்ன

இணக்க அலுவலர்

திருமதி. ஷியாமலி பெமரத்ன அவர்கள் , ஆபத்து மற்றும் இணக்கத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தனது வாழ்க்கையை Kreston MNS & Company இல் தணிக்கை பயிற்சியாளராகத் தொடங்கிய இவர் , Swarnamahal Finance PLC இல் ஆபத்து மற்றும் இணக்க அலுவலராக பணியாற்றியதோடு Orient Finance PLC இல் – ஆபத்து மற்றும் இணக்க பிரிவின் உதவி முகாமையாளராக கடமையாற்றியுள்ளார் . இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் B.Com சிறப்புப் பட்டமும், IBSL இல் வங்கி ஒருங்கிணைந்த ஆபத்து மேலாண்மை டிப்ளோமாவும் பெற்றுள்ளார். மேலும் இலங்கை சாட்டர்ட் கணக்காளர் நிறுவனத்தின் கணக்கியல் மற்றும் வணிக சான்றிதழையும் பெற்றுள்ளார்.

திரு. சுநேத் குமார

திரு. சுநேத் குமார

திரு. சுநேத் குமார அவர்கள் நிதித்துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தை பெற்றுள்ளார் . மேலும் கிளை நடவடிக்கைகள், தங்கக் கடன் விற்பனை மற்றும் நடவடிக்கைகள், சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் தனது வாழ்க்கையை ETI Finance Limited இல் ஆரம்பித்தார் , மேலும் Swarnamahal Financial Services PLC இல் தங்கக் கடன் மற்றும் கிளை நடவடிக்கை பிரிவுகளில் வெவ்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார் .

திரு. சுநேத் குமார இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் (IBSL) கடன் மேலாண்மை டிப்ளோமா மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் டிப்ளோமா ஆகிய கற்கைநெறிகளை பூர்த்தி செய்துள்ளார்.

திரு பண்டார சந்திரசேகர

முதன்மை முகாமையாளர் – பிராந்திய வணிக மேம்பாடு

திரு. பண்டார சந்திரசேகர அவர்கள் 2021 இல் பிராந்திய வணிக வளர்ச்சி தலைமை முகாமையாளராக PMF இல் இணைந்து கொண்டார் . விற்பனை, சந்தைப்படுத்தல், வணிக வளர்ச்சி, மீட்பு, திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் கிளை நடவடிக்கைகள் ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இவரது தொழில் வாழ்க்கை 2003 ஆம் ஆண்டில் Assetline Finance Ltd. இல் ஆரம்பமாகியது. மேலும் தனது சேவை காலம் முழுவதும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

திரு. பண்டார சந்திரசேகர அவர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சி அனுபவங்கள் வலுவான குழு சார்ந்த கலாச்சாரத்தை உருவாக்கும் திறனை வழங்கியுள்ளன. வணிக வளர்ச்சியை ஆதரிக்கும் பல்வழி சந்தைப்படுத்தல் முன்னெடுப்புகளை உருவாக்குவதிலும் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார் . மேலும், திரு. பண்டார சந்திரசேகர அவர்கள் UK இல் உள்ள வேல்ஸ் டிரினிட்டி செயின்ட் டேவிட் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றுள்ளதோடு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ வளர்ச்சி திட்டத்தில் சான்றிதழ் படிப்பையும், முதுகலை மேலாண்மை கழக முன்னாள் மாணவர் சங்கத்தில் முகாமையாளர் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

திருமதி திலினி குணவர்தன

சட்டத்துறை தலைவர்

திருமதி. குணவர்தன அவர்கள் நிதித்துறை தொடர்பான சட்டத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர். தனது தொழில் வாழ்க்கையை David Pieris Motor Company (Pvt) Ltd. இல் தொடங்கினார், மேலும் அதன் துணை நிறுவனமான Assetline Finance Limited இல் முக்கிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார் .
13 வருட கால ஆற்றல்மிக்க கூட்டாண்மைப் பயணத்தின் பின்னர், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிக வெளிப்பாட்டுடன் கையாளும் ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட்டின் சட்ட மற்றும் நிறுவன பணிப்பாளராக கடமையாற்றினார்.

இவர் அவுஸ்திரேலியாவின் Curtin தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து தகவல் தொழில்நுட்பத்தில் பி.எஸ்சி. சிறப்பு மதிப்பு பட்டம் பெற்றுள்ளார்.