திரு.சந்துல அபேவிக்ரம

தலைவர்
சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்

 

திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் பணிப்பாளர் குழுவில் சுயாதீன சார்பற்ற பணிப்பாளராக 2019 ஜூன் 26 ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்டு, PMF நிதி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார் .

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவம்:

இவர் நிதி உள்ளடக்கம், சமூக தொழில்முனைவு மற்றும் தாக்க முதலீடு ஆகியவற்றில் உலகளாவிய நிபுணர் ஆக திகழ்கிறார் .
இவர் ஆசியாவின் மிகப்பெரிய மைக்ரோ ஃபினான்ஸ் நெட்வெர்க்கின் (BWTP) பாங்கிங் வித் தி புவர் நெட்வெர்க்கின் தற்போதைய தலைவராகவும், ஆசிய வங்கியாளர்கள் சங்கத்தின் (ABA) நிதிச் சேர்க்கைக்கான ஆலோசகராகவும் உள்ளார். இம்பக்ட் இன்வெஸ்டிங்கிற்கான குளோபல் ஸ்டீயரிங் குரூப் (ஜிஎஸ்ஜி) இன் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகவும் இருந்து வருகிறார் , மேலும் குறிப்பாக இவர் தொடர்ந்து சர்வதேச மன்றங்கள் மற்றும் மாநாடுகளில் வங்கி வளர்ச்சி, நிதி உள்ளடக்கம் மற்றும் தாக்க முதலீடு ஆகிய துறை சம்பந்தமான உரைநிகழ்வுகளுக்கு முக்கிய பேச்சாளராக பேசுவதற்கும் அழைக்க பட்டுள்ளார் .திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் நிதி நிறுவனங்களின் பல சபைகளிலும் , உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும். அதிக எண்ணிக்கையிலான தனியார் துறை நிறுவனங்களிலும் கடமையாற்றி உள்ளார்.அத்தோடு கூட்டுத்தாபன சமூகப் பொறுப்பிற்கான தேசிய உச்ச அமைப்பான CSRஇன் ஸ்ரீலங்காவின் தலைவராகவும், பொது மற்றும் தனியார் துறை கூட்டுக் கடன் உத்தரவாத நிதியமான, குறைந்த வருவாய் வீட்டு நிதிக்கு ஆதரவளிக்கும் லங்கா நிதிச் சேவைகளின் தலைவராகவும் உள்ளார். மேலும் வருமான வீட்டு நிதி. வேர்ல்ட் விஷன் லங்கா மற்றும் கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் ஆகியவற்றின் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார் .

இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை (சிறப்பு) பட்டம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் டிப்ளோமா, இங்கிலாந்து, அஷ்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ உத்திகள்தொடர்பான பயிற்சி ஆகிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்துள்ளதோடு ஜப்பானின் டோக்கியோவில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்ப உதவித்தொகை சங்கத்தால் நடத்தப்பட்ட தென்கிழக்கு ஆசியாவில் நிதி மற்றும் வங்கி கற்கைநெறி மற்றும் மெல்பபேர்ன் பல்கலைக்கழகத்தில் கோப்ரேட் மேலாண்மை உத்தி கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார் . மேலும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பிசினஸ் பாடசாலையில் மேம்பட்ட தலைமைத்துவ உத்திகள் பற்றிய கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளார் .

இவரது தற்போதைய பதவிகள்:

திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் மிகப்பெரிய தேசிய தொலைக்காட்சி வலையமைப்பில் ஒளிபரப்பப்படும் இலங்கையில் சமூக தொழில்முனைவோர் மற்றும் தாக்க முதலீட்டாளர்களுக்கான முதல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான ‘Ath Pavura’ இன் இணை நிறுவனராக இருப்பதோடு , Lanka Impact Investing Network pvt Ltd (LIIN) இன் நிறுவனர் மற்றும் தலைவராகவும் இருந்து வருகிறார் . LIIN நிறுவனமானது இலங்கையின் முதல் தாக்க முதலீட்டு நிறுவனமாகும், இது நாடு முழுவதும் உள்ள சமூக தொழில்முனைவோரின் நன்கு அபிவிருத்தி அடைந்த சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், முதலீடு மற்றும் வணிக மேம்பாட்டுக்கு ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் தனியார் சமபங்கு நிதிகளை வழிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் இலங்கையில் தாக்க முதலீட்டுக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் (NABIISL) தலைவராகவும் உள்ளார்.

துணை பொது முகாமையாளர் – சில்லறை மற்றும் வளர்ச்சி வங்கித்துறைக்கான பொறுப்புக்குரியவர் என்ற அடிப்படையில் , திரு. அபேவிக்ரம அவர்கள் , HNB இன் சில்லறை மற்றும் வங்கி வளர்ச்சி துறையை உத்தியுடன் வழிநடத்தினார். இந்த உத்தி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (SME) மற்றும் சிறுநிதி போர்ட்ஃபோலியோக்களை மேம்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் உத்தியோகபூர்வ வழிகாட்டலை வழங்கியது. இவரது பதவிக் காலத்தில்,அதாவது 2013 இல் இவர் HNB வங்கியில் ஓய்வுபெறும் வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக Asia Money இதழால் இலங்கையின் சிறந்த சில்லறை வங்கியாக HNB வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் குறிப்பாக 25 ஆண்டுகளாக HNB வங்கியில் பணியாற்றினார். பின்னர், 2014 முதல் 2015 வரை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் திட்ட முகாமைத்துவப் பிரிவான CCC சொல்யூஷன்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளராக/பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) ஆலோசகராகவும் 2016 முதல் 2017 வரை பணியாற்றினார்.

நிர்வாகக் குழு துணைக் குழுக்களின் உறுப்பினர்:

வாரிய ஒருங்கிணைந்த இடர் மேலாண்மைக் குழு, கடன் குழு, கட்சி பரிவர்த்தனைகள் தொடர்புடைய மறு ஆய்வுக் குழு, நியமனக் குழு, மனித வளங்கள் மற்றும் ஊதியக் குழு , நிர்வாக தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார் .

திரு. டிராவிஸ் வாஸ்

நிர்வாகமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்

 

திரு. வாஸ் அவர்கள் 2020 ஜூன் 22 ஆம் திகதி முதல் நிர்வாகமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளராக PMF Finance PLC இன் மறுசீரமைப்பில் ஈடுபட்டவர். நிதி சேவை துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 1987 இல் லங்கா ஓரியண்ட் லீசிங் நிறுவனத்தில் தனது தொழில் வாழக்கையை தொடங்கியதிலிருந்து, நிதி சேவை துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, பரந்த அறிவு மற்றும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளகலைஞானி பட்டமும், அமெரிக்காவின் டெக்சாஸ் வடக்கு பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்ற திரு. வாஸ், HNB , வணிக் இன்க். நிறுவனம் மற்றும் அசெட்லைன் லீசிங் நிறுவனம் ஆகியவற்றில் குத்தகை நடவடிக்கைகளை முன்னோக்கித் ஆரம்பித்தவர். இந்நிறுவனங்களில் முறையே குத்தகை பிரிவின் மூத்த பணிப்பாளர் , மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் பொறுப்புகளை வகித்துள்ளார் .

இவர் இலங்கை குத்தகை சங்கத்தின் முன்னாள் பணிப்பாளராகவும் , டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிதி சேவை பிரிவின் செயல் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், ஒரியண்ட் நிதி சேவை நிறுவனத்தின் பணிப்பாளராகவும் / தலைமைச் செயல் அதிகாரியாகவும், கப்பிடல் கூட்டணி நிதி நிறுவனம், மக்கள் வணிக வங்கி மற்றும் எல்பி நிதி நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் சுயாதீனமற்ற பணிப்பாளராகவும் , பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திரு.ரங்கன மதுசங்க

நிர்வாகமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்

 

திரு. கே. ஆர். பி. மதுசங்க அவர்கள் 2019 ஜூன் 26 ஆம் தேதி முதல் , நிர்வாகமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளராக (வெளிப்புற ஆலோசக பணிப்பாளராக)நியமிக்கப்பட்டார். இவர் ஸ்டெர்லிங் ஓட்டோமொபைல்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாவர் .

எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் கணக்காய்வு பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் ஆரம்பித்த திரு.ரங்கன மதுசங்க அவர்கள் , கணக்காய்வு மற்றும் உறுதிப்படுத்தல் துறையில் 8 ஆண்டுகள் பணியாற்றி, வணிக மதிப்பீடு, முன்னுரிமை ஆய்வு, குற்றவியல் கணக்காய்வுகள், உள் கணக்காய்வுகள், திட்ட முன்மொழிவு உருவாக்கம், வணிகச் செயல்முறை ஒப்பந்த அவுட்சோர்சிங் மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்று BDO பார்ட்னர்களின் மூத்த முகாமையாளராக உயர்வு பெற்றார். வங்கி மற்றும் நிதி, காப்பீடு, சிறுநிதி, தோட்டங்கள், உற்பத்தி, பொது வர்த்தகம், ஆடை, இலாப நோக்கற்ற அமைப்புகள் மற்றும் சேவை சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவரது நிபுணத்துவம் பரவலாக உள்ளது.

திரு. மதுசங்க அவர்கள் , உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் மூத்த மற்றும் உத்தியோகபூர்வ நிலைகளில் தலைமைப் பதவிகளை வகித்ததன் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிறுவன அனுபவத்தை பெற்றுள்ளார் . இவர் டேர்டன்ஸ் மருத்துவமனையில் குழு கணக்காளராகவும் மற்றும் ஆசிரி அறுவை சிகிச்சை மருத்துவமனையில் மூத்த கணக்காளராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், பஹ்ரைனில் உள்ள ஒரே ஒரு சீனி சுத்திகரிப்பு ஆலை மற்றும் வளைகுடா பிராந்தியத்திற்கு பாரிய சீனி வழங்குனர்களில் ஒன்றான அரேபியன் சுகர் நிறுவனத்தில் குழு நிதி பணிப்பாளராக இணைந்து தனது மூத்த மேலாண்மை திறன்களை மேம்படுத்தியுள்ளார் .

திரு. மதுசங்க அவர்கள் இலங்கை கணக்கறிஞர் நிறுவனத்தின் இணை உறுப்பினராக அங்கம் வகிப்பதோடு , UK இன் கார்டிஃப் மெட்ரோபோலிடன் பல்கலைக்கழகத்தில் இருந்து MBA பட்டதையும் பெற்றுள்ளார் . மேலும், UK இன் நிபுணத்துவ நிதி மேலாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.

Mrs. Krystle Reid Wijesuriya 

Non-Executive Non-Independent Director

 

Ms. Wijesuriya is currently the Head of Strategic Planning at We Are Team Rocket, a specialised B2B growth marketing agency. She has experience working with multiple cross-functional teams related to strategic planning, process improvement, risk management, business development, and project management. Ms. Wijesuriya is also a diversity and inclusion specialist; she is one of the Co-Founders of Enable Lanka Foundation, which works to dignify and reframe the value of young persons with disabilities in society. The Foundation is the Sri Lankan partner for the APAC Microsoft Enabler program in Sri Lanka, which provides online training in data engineering and programming, cloud computing, and application development to young persons with disabilities.

She is also the Community Champion for India South and Sri Lanka, for the Global Shapers Community, an initiative by the World Economic Forum. In 2019, she was selected as one of the 50 Young Global Shapers to attend the Annual Meeting of the World Economic Forum in Davos. She is a Fellow of ChangemakerXchange, which is a global collaboration platform for young social innovators. Ms. Wijesuriya was also named the Commonwealth Young Person of the Year in 2017.

கலாநிதி நிர்மல் டி சில்வா 

நிர்வாகமற்ற சுயாதீன பணிப்பாளர்

 

பன்மதிப்புமிக்க வியூக ஆலோசகர், சிறு மற்றும் நடுத்தர தொழில் முன்னேற்றகர், சமூக முதலீட்டாளர் மற்றும் வணிக மேலாண்மை துணைப் பேராசிரியர் ஆகிய பன்முக தன்மைகளை கொண்டுள்ள வைத்திய கலாநிதி டி சில்வா அவர்கள் , உலகெங்கிலும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ‘சி-நிலை’ அனுபவத்தைக் கொண்டவர். இவர் பல பன்னாட்டு நிறுவனங்களிலும் ஃபோர்ச்சூன் 500 நிறுவனங்களிலும் தலைமைத்துவ பதவிகளை வகித்துள்ளார் .

வைத்திய கலாநிதி டி சில்வா அவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளான நிதி சேவைகள் , வேளாண்மை ,உணவு மற்றும் பானங்கள் , தொழில்நுட்பம் ,கைத்தொழில்கள் , கல்வி ,கற்றல் பயிற்சி , வசதி மேலாண்மை , முதலீட்டு போர்ட்போலியோ ,தொழில்முறை சேவைகள் , டிஜிட்டல் பொழுதுபோக்கு , நுகர்வோர் பொருட்கள் , வாழ்க்கை முறை சேவைகள் என வெவ்வேறு தொழில்களில் செயல்படும் பல நிறுவனங்களின் பணிப்பாளர் குழுக்களில் பணியாற்றி வருகிறார்

திரு டி சில்வா அவர்கள் பன்முகத்தன்மை கொண்ட ஒருவராக பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளார். இலங்கையில் குளோபல் இண்டெர்ப்ரினேர்ஷிப் நெட்வேர்க்கின் (GEN) பணிப்பாளர் குழு உறுப்பினராகவும், நாட்டின் தொடக்கநிலை மற்றும் சமூக தொழில் முனைவோர் சூழலை வடிவமைப்பதில் முக்கிய செல்வாக்கு செலுத்துபவராகவும் உள்ளார்.

ஒரு கல்வியாளராக,திரு டி சில்வா அவர்கள் பாடத்திட்ட மேம்பாடு, மென் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் முழுமையான கற்றல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் . திரு டி சில்வா அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஃபாஸ்டர் கப்பிடல், அமெரிக்காவில் மென்டர் கப்பிடல் நெட்வொர்க் (MCN), இலங்கையில் ஹட்ச் ஆகியவற்றிற்கு வழிகாட்டியாகவும், இலங்கை வர்த்தக சபையின் தொழில்முனைவோர் சூழல் மேம்பாட்டிற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் (NAC) உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார் .