திரு. டெரன்ஸ் குமார
துணை தலைமை நிர்வாக அதிகாரி
Peoples Merchant Finance PLC (PMF) ஆனது 15 ஜூன் 2022 முதல் நடைமுறைக்கு வருமாறு நிறுவனத்தின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக திரு. டெரன்ஸ் குமார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. திரு டெரன்ஸ் அவரது PMF நியமனத்துக்கு முன்னதாக சனச அபிவிருத்தி வங்கி PLCயில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நிதி, குத்தகை, பெருநிறுவன நிதி மற்றும் முதலீட்டு முகாமைத்துவம் ஆகியவற்றில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பரந்துபட்ட நிபுணத்துவமும் சிறந்த கல்வி அடித்தளமும் கொண்ட இவர் ஒரு அனுபவமிக்க நிதித்துறை நிபுணராக மிளிர்கிறார். நிதி அறிக்கையிடல், வரிவிதிப்பு, மூலதன சந்தை பரிவர்த்தனைகளை கட்டமைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. திரு. டெரன்ஸ் உள்ளக கட்டுப்பாடுகள், சட்ட வரைமுறை, இணக்கம் & நிதி இடர் மேலாண்மை ஆகியவற்றை வடிவமைப்பதில் ஒரு வலுவான பின்னணியைக் கொண்டவர். திரு. டெரன்ஸ், வணிகத் தேsவைகளை பகுப்பாய்வு செய்வதிலும், அடையாளம் கண்டுகொள்வதிலும், பிரத்யேக சேவையினூடாக வணிகத்தின் தேவைகளை செயல்படுத்தக்கூடிய உத்திகளாக மாற்றுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர். மேலும், அவர் சனச அபிவிருத்தி வங்கியில் கடமையாற்றிய காலத்தில், இலங்கையின் முதன்முறையாக டிஜிட்டல் தளத்தின் ஊடாக உரிமைப் பங்கு வழங்கலையும் முன்னெடுத்துச் செயற்படுத்தியுள்ளார்.
திரு. டெரன்ஸ் அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகமானி பட்டத்தை (MBA) பெற்றுள்ளார். மேலும் அவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICASL) சக உறுப்பினராகவும், இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (CMASL), இலங்கையின் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (AAT) ஆகியவற்றின் உறுப்பினராகவும் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் (CIMA) பாடநெறியினை நிறைவு செய்தவராகவும் அமைக்கிறார்.