திரு.சந்துல அபேவிக்ரம
தலைவர்
சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்
திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் பணிப்பாளர் குழுவில் சுயாதீன சார்பற்ற பணிப்பாளராக 2019 ஜூன் 26 ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்டு, PMF நிதி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார் .
தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவம்:
இவர் நிதி உள்ளடக்கம், சமூக தொழில்முனைவு மற்றும் தாக்க முதலீடு ஆகியவற்றில் உலகளாவிய நிபுணர் ஆக திகழ்கிறார் .
இவர் ஆசியாவின் மிகப்பெரிய மைக்ரோ ஃபினான்ஸ் நெட்வெர்க்கின் (BWTP) பாங்கிங் வித் தி புவர் நெட்வெர்க்கின் தற்போதைய தலைவராகவும், ஆசிய வங்கியாளர்கள் சங்கத்தின் (ABA) நிதிச் சேர்க்கைக்கான ஆலோசகராகவும் உள்ளார். இம்பக்ட் இன்வெஸ்டிங்கிற்கான குளோபல் ஸ்டீயரிங் குரூப் (ஜிஎஸ்ஜி) இன் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகவும் இருந்து வருகிறார் , மேலும் குறிப்பாக இவர் தொடர்ந்து சர்வதேச மன்றங்கள் மற்றும் மாநாடுகளில் வங்கி வளர்ச்சி, நிதி உள்ளடக்கம் மற்றும் தாக்க முதலீடு ஆகிய துறை சம்பந்தமான உரைநிகழ்வுகளுக்கு முக்கிய பேச்சாளராக பேசுவதற்கும் அழைக்க பட்டுள்ளார் .திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் நிதி நிறுவனங்களின் பல சபைகளிலும் , உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும். அதிக எண்ணிக்கையிலான தனியார் துறை நிறுவனங்களிலும் கடமையாற்றி உள்ளார்.அத்தோடு கூட்டுத்தாபன சமூகப் பொறுப்பிற்கான தேசிய உச்ச அமைப்பான CSRஇன் ஸ்ரீலங்காவின் தலைவராகவும், பொது மற்றும் தனியார் துறை கூட்டுக் கடன் உத்தரவாத நிதியமான, குறைந்த வருவாய் வீட்டு நிதிக்கு ஆதரவளிக்கும் லங்கா நிதிச் சேவைகளின் தலைவராகவும் உள்ளார். மேலும் வருமான வீட்டு நிதி. வேர்ல்ட் விஷன் லங்கா மற்றும் கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் ஆகியவற்றின் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார் .
இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை (சிறப்பு) பட்டம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் டிப்ளோமா, இங்கிலாந்து, அஷ்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ உத்திகள்தொடர்பான பயிற்சி ஆகிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்துள்ளதோடு ஜப்பானின் டோக்கியோவில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்ப உதவித்தொகை சங்கத்தால் நடத்தப்பட்ட தென்கிழக்கு ஆசியாவில் நிதி மற்றும் வங்கி கற்கைநெறி மற்றும் மெல்பபேர்ன் பல்கலைக்கழகத்தில் கோப்ரேட் மேலாண்மை உத்தி கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார் . மேலும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பிசினஸ் பாடசாலையில் மேம்பட்ட தலைமைத்துவ உத்திகள் பற்றிய கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளார் .
இவரது தற்போதைய பதவிகள்:
திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் மிகப்பெரிய தேசிய தொலைக்காட்சி வலையமைப்பில் ஒளிபரப்பப்படும் இலங்கையில் சமூக தொழில்முனைவோர் மற்றும் தாக்க முதலீட்டாளர்களுக்கான முதல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான ‘Ath Pavura’ இன் இணை நிறுவனராக இருப்பதோடு , Lanka Impact Investing Network pvt Ltd (LIIN) இன் நிறுவனர் மற்றும் தலைவராகவும் இருந்து வருகிறார் . LIIN நிறுவனமானது இலங்கையின் முதல் தாக்க முதலீட்டு நிறுவனமாகும், இது நாடு முழுவதும் உள்ள சமூக தொழில்முனைவோரின் நன்கு அபிவிருத்தி அடைந்த சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், முதலீடு மற்றும் வணிக மேம்பாட்டுக்கு ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் தனியார் சமபங்கு நிதிகளை வழிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் திரு.சந்துல அபேவிக்ரம அவர்கள் இலங்கையில் தாக்க முதலீட்டுக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் (NABIISL) தலைவராகவும் உள்ளார்.
துணை பொது முகாமையாளர் – சில்லறை மற்றும் வளர்ச்சி வங்கித்துறைக்கான பொறுப்புக்குரியவர் என்ற அடிப்படையில் , திரு. அபேவிக்ரம அவர்கள் , HNB இன் சில்லறை மற்றும் வங்கி வளர்ச்சி துறையை உத்தியுடன் வழிநடத்தினார். இந்த உத்தி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (SME) மற்றும் சிறுநிதி போர்ட்ஃபோலியோக்களை மேம்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் உத்தியோகபூர்வ வழிகாட்டலை வழங்கியது. இவரது பதவிக் காலத்தில்,அதாவது 2013 இல் இவர் HNB வங்கியில் ஓய்வுபெறும் வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக Asia Money இதழால் இலங்கையின் சிறந்த சில்லறை வங்கியாக HNB வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் குறிப்பாக 25 ஆண்டுகளாக HNB வங்கியில் பணியாற்றினார். பின்னர், 2014 முதல் 2015 வரை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் திட்ட முகாமைத்துவப் பிரிவான CCC சொல்யூஷன்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளராக/பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) ஆலோசகராகவும் 2016 முதல் 2017 வரை பணியாற்றினார்.
நிர்வாகக் குழு துணைக் குழுக்களின் உறுப்பினர்:
வாரிய ஒருங்கிணைந்த இடர் மேலாண்மைக் குழு, கடன் குழு, கட்சி பரிவர்த்தனைகள் தொடர்புடைய மறு ஆய்வுக் குழு, நியமனக் குழு, மனித வளங்கள் மற்றும் ஊதியக் குழு , நிர்வாக தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார் .