நிறுவன விவரம்

PMF Finance PLC – நிறுவன சுயவிவரம்

Path-maker Frontier Finance (PMF நிதியம்), முன்னர் People’s Merchant Finance என்று அறியப்பட்டது, இந்த நிறுவனமானது இலங்கையின் வங்கி, நிதி மற்றும் குத்தகைத் தொழில்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இயங்கி வருகிறது

எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், எதிர்காலத்திற்கான திட்டமிடலுடன் வணிகப் பாதையை மறுவரையறை செய்யவும், எங்கள் பெரும்பான்மை பங்குதாரரான ஸ்டெர்லிங் கேபிடல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (SCIL) இன் மூலதன உட்செலுத்தலால் எமது பயணம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கியியல் மற்றும் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவம் கொண்ட இயக்குநர்கள் குழுவின் நியமனம் மற்றும் எங்கள் முக்கிய வணிகச் செயல்பாடுகளை வழிநடத்தும் ஆற்றல்மிக்க நிர்வாகக் குழு ஆகியவை எமது அடுத்த கட்ட வணிகத்திற்கு நாங்கள் கவனம் செலுத்த உதவியுள்ளன.

நிறுவனத்தின் பெயர்

PMF Finance PLC 

இலட்சியம்

எப்போதும் ம் எங்கும் சிறந்த  நிதிச் சேவைகள் .

நோக்கம்

படைப்பூக்கம் மிக்க மனிதர்கள் மூலம், மேலும் பல இடங்களில், மேலும் பல மக்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்துததல்

மதிப்புகள்

  • நேர்மை – எங்கள் அனைத்து செயல்களிலும் எப்போதும் உயர்ந்த பண்புக் கோட்பாடுகளைப் பின்பற்றுவோம்.
  • உறவுகள்: உறவுகள்நம்பிக்கை மற்றும் பரஸ்பர வெற்றி தரும் தீர்வுகளைப் புதுமைப்படுத்தும் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து பங்குதாரர்களுடனும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்குவோம்.
  • மரியாதைஎங்கள் மக்களை மதிக்கிறோம், அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம், அவர்களின் வெற்றியை ஊக்குவிக்கிறோம், அவர்களின் செயல்திறனை பாராட்டுகிறோம்.
  • சமூகம் இலங்கை சமூகங்களில் நாங்கள் ஒன்றிணைந்து இயங்குகிறோம். உள்ளூர் சமுதாயங்களின் நல்ல பழக்கவழக்கங்களை அங்கீகரிப்பதும் மதிப்பதும் எங்கள் கடமை என்று கருதுகிறோம்.
  • சிறப்பை நோக்கிய பயணம்வங்கி மற்றும் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவம் கொண்ட இயக்குநர்கள் குழு மற்றும் எங்கள் முக்கிய வணிகச் செயல்பாடுகளை வழிநடத்தும் ஆற்றல்மிக்க நிர்வாகக் குழு ஆகியவற்றின் நியமனம் எங்கள் அடுத்த கட்ட வணிகத்தில் கவனம் செலுத்த எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

சட்டப் படிவம்

PMF Finance PLC என்பது 1983 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இலங்கையில் இணைக்கப்பட்ட ஒரு பொது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகும். இது பதிவு எண்: N (PBS) 22 ஐக் கொண்டுள்ளது. மேலும் இது 1994 ஜூலை மாதத்தில் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் எண்.07 இன் கீழ் மீண்டும் பதிவு எண்: PQ 200 என 2008 செப்டம்பர் 16 ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டது. மேலும், 2000 ஆம் ஆண்டு நிதி குத்தகைச் சட்டம் எண்.56 மற்றும் 2011 ஆம் ஆண்டு நிதித் தொழில் சட்டம் எண்.42 இன் கீழ் 2012 ஏப்ரல் 17 ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டது.

நிறுவனத்தின் பதிவு எண்.

PQ 200

LRA மதிப்பீடு

லங்கா மதிப்பீட்டு நிறுவனத்தால் “B+” (நிலையானது) என கடன் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது

நிறுவனத்தின் பங்குச்சந்தை பட்டியல் சுருக்கம்

நிறுவனத்தின் சாதாரண பங்குகள் 1994 ஜூலை மாதத்தில் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன.

தணிக்கையாளர்கள்

மெசர்ஸ் கே பி எம் ஜி ஃபோர்டு, ரோட்ஸ், தோர்ன்டன் & கம்பெனிபட்டய கணக்காளர்கள்

அஞ்சல் முகவரி

இல. 361, 361/1, ஆர். . டி மெல் மாவத்தை, கொழும்பு 03

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்